Sunday, July 24, 2011

கடைக்கு போ - எட்டும் இரண்டும் - திருமந்திரம்


சிவ செலவராஜ் ஐயாவின் திருமந்திர பாடலுக்கான விளக்கம்:



"எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்."

எட்டு    - அ - வலது கண்  ............. இரண்டு    - உ - இடது கண்





இவைதான் சூரிய சந்திரன், சிவசக்தி! எட்டும் இரண்டும் பத்தாகிய அக்னிஸ்தானம் ஆத்ம ஸ்தானம் நம் தீ தான் நந்தி! இரு கண் மணி ஒளியை பெருக்கி உள்ளே ஜீவஜோதியை நம் தீயை அடைந்ததால் அறிவித்தான் நந்தி! நந்தி அருளால்  அறிவு துலங்க அறிந்தனன் நான்! அது என்ன? ஆத்ம ஜோதி லிங்க வடிவமாம்! எட்டும் இரண்டுமான கண்களும் லிங்கம் போல தோன்றும் என்கிறார். சிவலிங்கத்தை மேலிருந்து பார்க்க வேண்டும்... பார்த்தால் மூன்று வட்டமே லிங்கம் என்கிறார். ஞான சற்குருவின் உபதேசத்தால்தான் எட்டும் இரண்டும் அறிய முடியும். எட்டும் இரண்டும் பற்றி சொல்லாத ஞானிகளே இல்லை! இது உங்கள் அறிவுக்கு எட்ட வேண்டும். அடியேனால் முடிந்தவரை உங்கள் அறிவுக்கு எட்டும்படியாக கூறி விட்டேன்! எட்டாத தூரத்தில் இல்லை! எட்டி பிடியுங்கள்! எண் குணன் அருள் பரிபூரணமாக கிட்டும்!


எட்டு இரண்டு நமது தமிழ் மொழியுடன் எவ்வாறு பின்னி பினைந்திருக்கிறது என்பதற்க்கு ஒர் உதாரணம்

சிறு வயதில் நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் “கடைக்கு போ” என்ற வார்த்தையை அவரவர் அம்மா வாயால் நிச்சயமாக கேட்டிருப்போம்.

நீங்கள் கேட்டு இருக்கிறீர்களோ இல்லையோ... இந்த கதையில் வரும் “தணிகை மணி” பலமுறை கேட்டு இருக்கிறான். கேட்ட மாத்திரத்தில் சலிப்பாகவும், கசப்பாகவும் இருக்கும் அவனுக்கு. ஏன் எனில் “தணிகை மணி” தான் கால்பந்து விளையாட செல்ல வேண்டுமே? கடைக்கு சென்றால கால்பந்து விளையாட முடியாதே!!

உடனே அவன் சொல்லுவான்... போம்மா கடை ரொம்ப தூரம் என்று....

தாயுக்கும் அவனை பற்றி தெரியும் அல்லவா.... இப்பொழுது அவள் அவன் பெயரை மறந்து விட்டு என்னடா கண்ணா இப்படி சொல்கிறாய் என்பாள்... (ஆம், சிந்தியுங்கள் நாம் குமார், கார்த்தி, ராம் அல்லது சிவா அல்லது எந்த பெயரில் இருந்தாலும் என் அனைத்து தமிழ் தாய் மார்களும் சொல்வது “கண்ணா” என்று மட்டும்தான்... இங்கே ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று நாம் சிந்தித்தால்... இதுதான் சித்தர்கள் சொன்ன ம்ற்றும் வள்ளல் பெருமான் இறங்கி சொன்ன ஞான தவம்)

ஒரு நொடியில் “தணிகை மணி” யாக இருந்து கண்ணணாக மாறிய அந்த பையன் சொல்வான் போம்மா... கடை ரொம்ப தூரம்... கால் எல்லாம் வலிக்கும் என்று சொல்கிறான்.





கண்ணன் கள்வன் அல்லவா... அதை அவள் தாயும் அறிவாள் அல்லவா?

ஒரு பொய் கோபத்துடன்..........

டேய் கண்ணா ஒரு ரெண்டு எட்டு வைச்சா கடைக்கு போயிடலாம் ஆனா இதுக்கு போய் சலித்து கொள்கிறாயே என்று சொல்வாள்?

அவனும் ஒருவாறு சமாதனம் அடைகிறான் என தாய் தெரிந்து கொள்கிறாள்....

இப்பொழுது ராஜா இல்லை, என் கண்ணு இல்லை, போட கண்ணா என்று அவளும் குழைந்து சொல்கிறாள்....

மெல்ல... அவனுடைய திருவடிகளை எடுத்து வைக்கிறான்...




ஆம் 8 - லும், 2 - லும் வைக்கிறான்.... மெதுவாக நடக்கிறான்...

பின்னாடி இருந்து அம்மாவின் குரல் ஒலிக்கிறது..... என்னடா மச மச வென போய் கொண்டிருக்கிறாய்... விறு விறு என நடடா என்று....

வைக்கிறான் வேகமாக...

8 , 2
2 , 8
8 , 2
2 , 8 என்று மாற்றி மாற்றி நடக்கிறான்.

தணிகைமணி போய் சேர்ந்தானா இல்லையா என்று கேட்கிறீர்களா.............

தணிகைமணி.....

அவந்தான் கண்ணன் னாயிற்றே

அவந்தான் ராஜா வாயிற்றே  ---  போய் சேராமல் இருந்து விடுவானா என நான் கேட்கவில்லை வள்ளலார் கேட்கிறார்.


இதில் ரெண்டு, எட்டு மற்றும் கடை என்றால் என்ன வென்று உங்களுக்கு புரிந்தால் போதும்

ரெண்டு  - 2

எட்டு  - 8

வைத்தால்

கடை - ஞானம்  (கடைந்தேருவது .... என்று பொருள்)

இந்த 8 ஐயும் 2 ஐயுமே கண்ணா(கண்கள்) என்று சொல்கிறார்கள்

இந்த கண்களையே ராஜா என்கிறார்கள்... ராஜா தானே ஆட்சியை பிடிப்பான் ( ஞானத்தை பிடிப்பான்)


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!



Saturday, July 23, 2011

வள்ளலாரிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்?



வள்ளலாரிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்? (Vallalar)


கொஞ்சம் விளக்கி சொல்வது என்றால் நாம் குரங்கு குட்டி மாதிரி இருக்க வேண்டுமா அல்லது பூனை குட்டி மாதிரி இருக்க வேண்டுமா?



நான் ஒரு போதும் குரங்கு குட்டியாக இருக்க ஆசைபட்டதில்லை. ஏன் எனில் நீங்கள் குரங்கையும், குரங்கு குட்டியையும் பார்த்து இருக்கிறிர்களா



ஆம், குரங்கு மரத்திற்க்கு மரமும், மாடிக்கு மாடி தாவும் போது சிறிது கவனித்து பாருங்கள். அப்படி குரங்கானது தாவும் போது அதன் குட்டியை பாருங்கள்! குட்டிதான் அதன் தாயை கெட்டியாக பிடித்திருக்கும். தாய் குரங்கோ, நம்து குழந்தை (குட்டி குரங்கு) நம்முடன் இருக்கிறது என்ற நினைவே இல்லாமல் அசாத்தியமாக தவ்வி கொண்டிருக்கும். இதை பார்க்கும் போதே எனக்கு மனம் பதறும்... எங்கே குட்டியானது விழுந்து விடுமோ என்று!






ஆனால், நீங்கள் பூனையையும் பூனை குட்டியையும் பார்த்து இருக்கிறீர்களா... பூனை குட்டியானது அமைதியாக மட்டுமே இருக்கும், பூனையின் தாயே அந்த குட்டிக்கு தேவையானதை செய்யும். ஆம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு செல்ல வேண்டுமானால் தாயே அதை பாதுகாப்பாக வாயால் கவ்வி கொண்டு எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்த்து விடும்.




ஆம், நாம் பூனை குட்டி போல அமைதியாக இருக்க(சும்மா இருக்க) மட்டுமே முயற்ச்சி செய்தால் போதும் மற்றதெல்லாம் நமது குரு நாதர் வள்ளல் பெருமானே தாய் தன்மையுடன் இந்த சமய்த்தில் நாம் இது செய்ய வேண்டும் என்றால் அந்த இடத்தில் நம்மை கொண்டு சென்று விட்டு விடுவார். இந்த இடத்தில் நாம் இருக்க கூடாது என்றாலும் அந்த இடத்தில்ருந்து நீக்கி பாதுகாப்பான இடத்திற்க்கு நம்மை மாற்றி விடுவார்.







மேலும் ஒரு முறை குரங்கு குட்டியானது தாயை பிடித்திருக்கும் பிடியை விட்டு விட்டால் அவ்வளவுதான் அந்த குட்டியை மீண்டும் அந்த தாய் சேர்த்து கொள்ளாது.


ஆனால் பூனை குட்டி வழி மாறி எங்காவது கிடந்தால் கூட அந்த தாய் பூனை மீண்டும் அந்த குட்டியை தேடி வந்து தூக்கி சென்று நல் வழிபடுத்திவிடும்.



ராமலிங்க சுவாமிகளை பிடிப்போம் --- சும்மா இருப்போம் --- மரணமிலா வாழ்வு பெறுவோம்.




-- சிவ செல்வராஜ் ஐயா




கன்னியாகுமரி - தங்கஜோதிஞானசபை - சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

-------------------------------------------------------------------------------------------



Vallalar - ThiruArutPrakasaRamalingaSwamigal - Sathya Gana Sabai - Thavam - Meditation